Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
புதன், 31 மே 2023 (07:37 IST)
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்து தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை மாறி வருவதாக கூறப்படும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று கத்தரி வயலின் தாக்கம் முடிவடைந்தது அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் கோடை மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் மன்னார் வளைகுடா, தெற்கு கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்ககடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments