மக்கள் தொகை அடிப்படையில் எம்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கு அதிமுக, திமுக உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1272 எம்பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் சீரமைப்பு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் இது குறித்து கூறிய போது தமிழ்நாடு மட்டுமன்றி ஒட்டு மொத்த தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதிமுக திமுக மட்டும் இன்றி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பாஜகவினர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.