Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது எங்களது உரிமை; அணை கட்டுவது உறுதி.. கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவிப்பு..!

Webdunia
புதன், 31 மே 2023 (07:26 IST)
கடந்த சில ஆண்டுகளாக மேகதாது அணை கட்டுவது குறித்த பிரச்சனை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையே இருந்து வரும் நிலையில் மேகதாது அணை கட்டுவது எங்களது உரிமை என்றும் அணை கட்டுவது உறுதி என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் திட்டவட்டமாக கூறி இருப்பதால் தமிழகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீர்வளத்துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் டிகே சிவகுமார் பதவியேற்றார். இவர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்து உள்ள வாக்குறுதிகளில் ஒன்று மேகதாது அணை கட்டப்படும் என்றும் எனவே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கண்டிப்பாக இந்த அணை கட்டப்படும் என்றும் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
 
 விரைவில் டெல்லி சென்று உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக காங்கிரஸ் ஆட்சி உறுதியாக இருப்பதால் தமிழகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு தகுதியாகாது: விஜய்யை விமர்சித்த மதுரை ஆதினம்..

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

இன்று வக்பு வாரிய மசோதா: ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனை..!

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments