Publish Date: Tue, 10 Jun 2025 (14:49 IST)
Updated Date: Tue, 10 Jun 2025 (14:50 IST)
தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 14, 15 ஆகிய இரண்டு நாட்களில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அதாவது ஜூன் 11ஆம் தேதி, தென் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.