Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டதை விட முன்கூட்டியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு: தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (17:25 IST)
சென்னை அருகே உள்ள கிளாம்பாகத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஜனவரி மாதத்தில் அதாவது பொங்கலுக்கு முன் திறக்கப்படும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  
 
சென்னை அடுத்த கிளாம்பாகத்தில்  பேருந்து நிலையம் டிசம்பர் 30ஆம் தேதி திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 
 
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாகம் பேருந்து நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னதாக ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளத்தை அடுத்து தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments