Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எண்ணூரில் வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (17:20 IST)
சென்னை எண்ணூரில் இன்று அதிகாலை திடீரென அமோனியா வாயு கசிந்த நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனை அடுத்து அமோனியா கசிவு ஏற்பட காரணமாக இருந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது சென்னை எண்ணூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து உடனடியாக ஆய்வு குழு மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments