Publish Date: Wed, 29 Dec 2021 (15:11 IST)
Updated Date: Wed, 29 Dec 2021 (15:16 IST)
இந்தியாவின் மிகசிறந்த கல்வி நிலையங்கள் குறித்த தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான டாப் 10 பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த ஆண்டு சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்துள்ளது.
கல்வி நிறுவனங்களின் சிறந்த புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிபுகளை மையப்படுத்தி வெளியிடப்படும் இந்த தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.