Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு!

Advertiesment
விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு!
, புதன், 29 டிசம்பர் 2021 (14:56 IST)
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 
 
சென்னையில் விளம்பர பேனர்களை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி பலர் விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:
 
முதன்மைச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க சென்னையின் மண்டலம் 1 முதல் 15 வரை மண்டல அலுவலர்கள், மண்டல செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் அந்தந்த மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து விதிகளின்படி அபராத தொகையை அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை அறிக்கையாக மாநகர வருவாய் அலுவலர்கள் இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா விடுதலை முதல் ஒமிக்ரான் வரை.... 2021 கடந்து வந்த பாதை!!