கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்.. தமிழக அரசு வழக்கறிஞரிடம் சரமாறி கேள்வி கேட்ட நீதிபதி..!

Mahendran
திங்கள், 27 அக்டோபர் 2025 (12:44 IST)
அரசியல் கட்சிகள் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் வரை, சாலைகளில் ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தது. அப்போது தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா, அரசின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது ஆகாதா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், இந்த கட்டுப்பாடுகளுக்கான சட்ட அடிப்படையையும் அவர் வினவினார். விதிகள் வகுப்பதில் உள்ள தாமதத்தை குறித்து நீதிபதி கேள்வி எழுப்ப, அரசு தரப்பு ஆலோசனை நடைபெறுவதாக தெரிவித்தது.
 
தமிழக வெற்றிக் கழகம் தரப்பு, கரூர் பிரச்சாரத்துக்கு தாமதமாக அனுமதி வழங்கியதால் தான் அசம்பாவிதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது. மேலும், சில கட்சிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர்கள் முறையிட்டனர்.
 
அனைத்துக் கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படாவிட்டால், நீதிமன்றமே தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறுவை சிகிச்சை செய்தாலும் படுக்கையில் இருந்து வேலை செய்ய வேண்டும்.. மேனேஜர் அழுத்தத்தால் பெண் அதிர்ச்சி..!

எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பக்தர்கள் பரவசம்..!

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments