தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அர்ச்சகர்களை நியமித்ததற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழக கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கான பணியிடங்களை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” திட்டத்தின் மூலம் பலரை பணி நியமனம் செய்தது.
இந்நிலையில் இந்த பணி நியமனங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள இந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கம், இந்த பணி நியமனத்திற்கு இடைக்கால தடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதுடன், இதுகுறித்து விளக்கம் அளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.