இந்தியே தேசிய மொழி என்ற மூட நம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஒருவர் உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமைட்டோவிடம் ஆர்டர் செய்த உணவில் பாதிக்குமேல் வரவில்லை என்று புகார் செய்தார். மேலும் அவர் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்ட போது உங்களுக்கு பிரச்சினையை விளக்க இந்தியில் விளக்கத் தெரியவில்லை. இந்தியாவில் இருந்துகொண்டு தேசிய மொழியான ஹிந்தி தெரியாமல் ஏன் இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்காது என கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. இதனை தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.