Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது.. NLCக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது.. NLCக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (16:57 IST)
என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்துவிட்டு நிலத்தை என்எல்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் என்எல்சி நிறுவனத்திற்காக வழங்கப்பட்ட இடத்தில் புதிதாக பயிரிட கூடாது என்றும் மீறினால் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
ரூபாய் 25 லட்சம் இழப்பீடு என்பது 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் அதற்கு முன்பாக நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்றும் சென்னையை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயர் கனெக்சன் தேவையில்ல.. வெளியானது Airtel Xstream AirFiber 5G! – என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?