Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில் நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி மாரடைப்பால் மரணம்!

Advertiesment
Spandana Ragavendra Vijay Raghavendras wife
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (15:39 IST)
கன்னட சினிமா நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா சுற்றுலாவுக்குச் சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார். ஸ்பந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அபூர்வா என்ற படத்தில்  நடித்திருந்தார்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய ராகவேந்திரா தன்  மனைவி ஸ்பந்தனா மற்றும் மகனுடன்  தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.

சுற்றுலாவுக்குச் சென்றிருந்த இடத்தில், ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.  பிரபல நடிகரின் மனைவி இறந்த சம்பவம் கன்னட சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ஸ்பந்தனாவின் உடலை இந்தியா கொண்டு வர அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயிலில் நடிகர் யோகி பாபுவுக்கு கை கொடுக்காத ஐயர்? வைரலாகும் வீடியோ