அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழ் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியின் துவக்க விழா அழைப்பிதழ் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் குழு பாலாஜி, கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் சிறப்பு விருந்தினர் என அந்த அழைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் நிலையில் அவரது கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அவர் எப்படி நாளை நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அழைப்பிதழ் குறித்து நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்