Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்தீர்கள் – செக் வைத்த உயர்நீதிமன்றம் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (08:05 IST)
சென்னையில் அதிகளவில்  பரவி பல உயிர்களைப் பலிவாங்கிய டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் வருடா வருடம் பரவி வருகின்றன. டெங்கு காய்சலை பரப்பும் கொசுக்கள் அதிகளவில் கால்வாய்கள் மற்றும் சாக்கடைகளில் இருந்து உற்பத்தியாவதால்  கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த கால்வாய்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி சூரிய பிரகாசம்  என்ற வழக்கறிஞர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது சம்மந்தமாக அறிக்கை வெளியிடக்கோரி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஓராண்டுக்குப் பின் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பிற்காக செலவழிக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கப்பட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் நிதி ஒதுக்கியது ஒரு புறம் இருக்கட்டும், ஆக்கப்பூர்வமாக செய்யப்பட்ட வேலைகள் குறித்து வரும் டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். அறிக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments