Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

Advertiesment
ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:00 IST)
இன்று நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவைகளாக பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்,  அரசுப் பள்ளிகளை மூடப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகியவைகளை முன்னிறுத்தினர். இது சம்மந்தமாக அந்த அமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று சென்னை நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார். அவர் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் மற்றும் மாணவர்களுக்கு இது தேர்வுக் காலம் எனவும் நீதிபதிகள் முன்னர் வாதிட்டனர்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் வேலைநிறுத்தப் போராட்டத்தை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துக் கொள்ள இயலுமா எனக் கேள்வியெழுப்பினர். அதனை ஏற்றுக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் டெல்டா பகுதியில் கனமழை: பள்ளிகள் விடுமுறை