Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெங்கு காய்ச்சல்: செய்ய வேண்டியவை என்ன....?

Advertiesment
டெங்கு காய்ச்சல்: செய்ய வேண்டியவை என்ன....?
டெங்கு காய்ச்சல் வைரசால் ஏற்படுகிறது. இவை கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்  காய்ச்சலுடன், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள்  ஏற்படும்.
இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது.
 
ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது.
 
மருத்துவ குறிப்புகள்: பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை  காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தத்தில் உள்ள  தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாகச் சித்த மருத்துவம் கூறுகின்றது.
 
எனவே தொடர்ந்து உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவுகளை கொடுத்து நோயின்  பிடியிலிருந்து காப்பாற்றுவது அவசியமாகும். 
 
செய்ய வேண்டியவை: கொசுக்கடியிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும், அதிகப்படியான ஓய்வு எடுக்க வேண்டும், இதற்கு தடுப்பு மருந்து கிடையாது.
 
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அதிலும்  குழந்தைகளுக்கு பாராசிடாமல் ஊசிகள் போடக்கூடாது என்று இந்திய மருத்துவக்கழகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி தினத்தன்று கங்கா ஸ்தானம் சிறப்புகள்....!