Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் டோக்கன் ரூ.500 – சூடுபிடிக்கும் கள்ள டோக்கன் வியாபாரம்!

Advertiesment
Chennai
, வியாழன், 21 மே 2020 (12:47 IST)
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க அளிக்கப்படும் டோக்கன்களை கள்ளசந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் விற்பனை இருந்து வந்த நிலையில் தற்போது விற்பனை மந்தமாகி இருப்பதாக தெரிகிறது.

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் சென்னை வாசிகள் மது வாங்க மற்ற மாவட்டங்களுக்கு பயணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாலஜாபாத் பகுதியை சேர்ந்த பலர் சென்னையிலிருந்து வருபவர்களுக்கு டாஸ்மாக் டோக்கனை ரூ.500 வரை முறைகேடாக விற்பதாக கூறப்படுகிறது. இதனால் விழுப்புரம் – தாம்பரம் நெடுஞ்சாலையில் டோக்கனுக்காக சென்னையிலிருந்து பலர் கூட்டம் கூட்டமாக வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாலி கட்டிய கணவன்; அழைத்து சென்ற காதலன்! – எல்லாரையும் கைது செய்த போலீஸ்!