Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - செங்கல்பட்டு வழித்தடம்.. இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து..!

Siva
வெள்ளி, 11 ஜூலை 2025 (07:45 IST)
சென்னை மற்றும் செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 19 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 
 
சென்னை - விழுப்புரம் பிரிவில் சிங்கப்பெருமாள்கோவில் யாா்டில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 மணிக்கு புறப்படும் புகா் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள்கோவில் வரையே செல்லும். 
 
அதேபோல, காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புகா் மின்சார ரயில் செங்கல்பட்டில் நிறுத்தப்படும். 
 
முழுமையான ரத்து: செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே செல்லும் புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை காலை 9.55, 10.40, 11, 11.30, 12, பிற்பகல் 1.10 ஆகிய நேரங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. 
 
சிறப்பு ரயில்கள்: பல புகா் மின்சார ரயில்கள் ரத்தாகும் நிலையில் பயணிகள் வசதிக்காக காட்டாங்குளத்தூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10.13 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து காலை 10.46, 11, 11.20, பகல் 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து காலை 11.30 மற்றும் பகல் 1.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு என பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் 
இவ்வாறு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments