Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் திடீர் பள்ளம்.. பேருந்து சிக்கியதால் பரபரப்பு..!

Advertiesment
மீனம்பாக்கம்

Siva

, திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (16:37 IST)
சென்னை மீனம்பாக்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் மாநகர பேருந்து சிக்கியதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றன.

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக தான் இந்த பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன் சென்னை ஜிஎஸ்டி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சிக்கியதாகவும் இதனை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

எப்போதும் பிசியாக இருக்கும் ஜிஎஸ்டி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நிலைமையை சரி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனுக்கு பதவி வழங்கும் முதல்வர் மக்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.! திருமதி பிரேமலதா விமர்சனம்.!!