Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இறந்த இளைஞரை 3000 கிமீ ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுனர்!

Advertiesment
சென்னையில் இறந்த இளைஞரை 3000 கிமீ ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுனர்!
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (18:23 IST)
சென்னையில் இறந்த இளைஞரை 3000 கிமீ ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுனர்!
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடலை 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்ற ஓட்டுநர் குறித்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா என்ற 28 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலை மிசோரம் தலைநகர் ஐய்ஸ்வால் நகருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர்
 
தற்போது ரயில், விமானம் உள்பட எந்த போக்குவரத்தும் இல்லை என்பதால் அவரது உடலை சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு உரிய அனுமதி பெற்று மிசோரம் மாநிலத்திற்கு இறந்த இளைஞரின் உடலை சுமந்து கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது., சுமார் 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த அந்த இளைஞரின் உடலை சென்னையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மிசோரம் மாநிலத்தில் கொண்டு போய் சேர்த்தார். இதனையடுத்து அவரது செயலைப் பாராட்டி மிசோரம் மாநில மக்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம் - மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு