சென்னை கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, இரண்டு பேருக்கு கொரோனா உறுதியான போது இன்னும் நான்கு பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை மூட வேண்டி வரும் என காவல் ஆணையர் எச்சரித்து இருந்தார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் 600 மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது சிஎம்டிஏ.