தமிழகத்தில் இன்றும், வரும் நாட்களிலும் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்னிந்திய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மார்ச் 25, 26-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி வரை செல்சியஸ் உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K