தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்று, மார்ச் 6ஆம் தேதி, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஆனால், மார்ச் 7, 8, 9 ஆகிய நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம்.
மேலும், மார்ச் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஆனால், மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பாக அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்றும் வறண்ட வானிலை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருக்க வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடையில் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது