Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரியர் தேர்வு எழுதமால் சான்றிதழ் வழங்கக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!

அரியர் தேர்வு எழுதமால் சான்றிதழ் வழங்கக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!
, வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:10 IST)
அரியர் தேர்வு எழுதமால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு!
 
கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுரத்து செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
ஆனால், அரியர்தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்தது. 
 
இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வு மாணவர்களுக்கு, இரு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும்  கூறியது. எனவே தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார். 
மேலும், அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என கூறியதோடு அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் எப்படி?