சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கொலை செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் இறந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார வயரை வாயால் கடித்து மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்குமாரின் தந்தை மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்ததின் அடிப்படையில் அந்த வழக்கில் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என மருத்துவர்கள் ஆணித்தரமாக கூறியுள்ளனர். வழக்கில் அரசியல் தலையீடு உள்ளதாகக் கருதுகிறோம். இந்த வழக்கை அரசு மறுதிறவு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.