Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் பண்டிகை நாளில் தேர்வுகள்.. கேந்திரியா வித்யாலயா முக்கிய அறிவிப்பு .. !

Advertiesment
பொங்கல் பண்டிகை நாளில் தேர்வுகள்.. கேந்திரியா வித்யாலயா முக்கிய அறிவிப்பு .. !

Siva

, திங்கள், 13 ஜனவரி 2025 (18:12 IST)
ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்தப்படுவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து மதுரை எம்பி வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக பதிவு செய்திருந்தார்.
 
இதனை அடுத்து, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வுகள் ஜனவரி 13 முதல் 16 வரை நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை எம்பி வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: 
 
பொங்கல் திருநாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதிகள் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா அறிவித்திருக்கிறது. மகிழ்வு மாணவர்களுக்கு இனிய பொங்கள் வாழ்த்துகள்
 
பொங்கல் விழாவுக்காக கேந்திரிய வித்யாலயா தேர்வுத் தேதிகளை மாற்றக்கோரிய எனது கடிதத்திற்கு தரப்பட்டுள்ள பதில்;
 
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), சென்னை பிரிவு, பொங்கல் திருவிழா நாட்களில் தேர்வுகள் நடக்காமல் இருக்க தேர்வுத் தேதிகளை மாற்றியமைத்திருக்கிறது.
 
தேர்வுகள் முதலில் ஜனவரி 13, 2025 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு தேதி மாற்றப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தேன்.  அதனடிப்படையில் , ஜனவரி 13 முதல் 16 வரை தேர்வுகள் நடக்காது என்று கேந்திரிய வித்யாலயா பதில் தந்துள்ளது.
 
கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை விரைவாக செய்த கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு நன்றி.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ போலவே புறநகர் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!