Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டம்! – மத்திய அரசு பாராட்டு!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (12:12 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டத்தை மத்திய அரசு பாராட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளே ஊரடங்குகளை அறிவித்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறாக ஒவ்வொரு மாநிலமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக சில வழிமுறைகளை கையாள்கின்றன.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பயணிக்க ஆம்புலன்ஸ் வசதி போதாமை இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் நோயாளிகள் பலர் எளிதாக மருத்துவமனைகளை சென்றடைகின்றனர்.

இந்நிலையில் மாநில அரசுகளின் குறிப்பிடத்தக்க திட்டங்களை பட்டியலிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எங்கே? பாலச்சந்திரன் பேட்டி..!

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

அடுத்த கட்டுரையில்
Show comments