Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா...?

Advertiesment
அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா...?
, வியாழன், 20 மே 2021 (23:24 IST)
திசைகள்:

 
 
கிழக்கு - அகல் விளக்கை கிழக்கு திசையில் ஏற்றினால் உங்களை பின்தொடரும் துன்பங்கள் நீங்கும், சமூகத்தில் நல்ல மதிப்பும், பெயரும் கிடைக்கும் என  கூறப்பட்டுள்ளது.
 
மேற்கு - மேற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால், உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விளகம்.
 
வடக்கு - வடக்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும்.
 
தெற்கு - தெற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் எதிர்பாராத தொல்லைகள், கடன் சுமை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் வீட்டில் அதிகரிக்கும் என  கூறப்பட்டுள்ளது.
 
திரிகள்:
 
பஞ்சு திரி - பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் சுபம் கூடும்.
 
தாமரை தண்டு திரி - தாமரை தண்டு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் முன் பிறவி பாவங்கள் அகலும், செல்வம் பெருகும்.
 
வாழை தண்டு திரி - வாழை தண்டி திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 
வெள்ளெருக்கு பட்டை திரி - வெள்ளெருக்கு பட்டை திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் செய்வினை விலகும், ஆயுள் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் பைரவர் வழிபாடு !!