Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேமிலிமேனை தடை செய்யலைனா விளைவு மோசமாக இருக்கும்! – சீமான் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (11:43 IST)
விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஃபேமிலிமேன் தொடரை தடை செய்ய வேண்டும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியில் உருவாக்கப்பட்டு அமேசான் ப்ரைமில் 2019ல் வெளியான வெப்சிரிஸ் ஃபேமிலிமேன். ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள தீவிரவாதம் மற்றும் புலனாய்வை மையமாக கொண்ட இந்த வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதன் இரண்டாம் சீசன் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக இரண்டாம் சீசன் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது இந்நிலையில் சமீபத்தில் அதன் டிரைலர் வெளியாகியுள்ளது.

இதில் சென்னையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது போலவும் அதை புலனாய்வு செய்ய மனோஜ் பாஜ்பாய் வருவது போலவும் காட்டப்படுகின்றன. மேலும் சமந்தா இதில் பெண் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதும், அவர் இலங்கை தமிழில் பேசுவதும் மேலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஃபேமிலிமேன் தொடருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ஃபேமில்மேன் சீசன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்... நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எச்சரிக்கை விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருப்பது உள்நோக்கம் உடையது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments