தமிழகத்தில் இரண்டு வார ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை முடிவு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 10ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு எதிர்வரும் 24ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரி 35 ஆயிரமாக உள்ளது.
இதனால் இந்த இரண்டு வார ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு குறித்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களது ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.