கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது கரூரில் சி.பி.ஐ. அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் விளக்கம் அளிக்க பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. இவர்கள் இருவரிடமும் கரூர் துயர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.