Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (11:26 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சமீபத்தில் சிபிசிஐஇயிடம் இருந்து சிபிஐக்கு மாறிய நிலையில் நேற்று இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது.
 
இந்த மனுமீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர்களையும் 5 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது
 
இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக 5 போலீசாரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை தொடங்கியதும் 5 போலீசாரை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. சிபிஐ காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்குமா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments