சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்
அந்த வீடியோவில் ஆவேசமாக அவர் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் இந்த வீடியோ வைரல் ஆன பின்னரே இந்த விவகாரம் நாடு முழுவதும் தெரிய ஆரம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி போலீசார் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனை மதுரை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவை நீக்கியுள்ளார். இருப்பினும் அந்த வீடியோவை பலர் பகிர்ந்துள்ளதால் தற்போதும் அந்த வீடியோ இணையதளங்களில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றது இந்த நிலையில் சுசித்ராவின் வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிசிஐடி போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சுசித்ராவின் வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும் அந்த வீடியோவை அனைவரும் நீக்க வேண்டும் என்றும் அந்த வீடியோ போலீசாருக்கு எதிராக தூண்டி விடுவது போல் இருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது
இதனை அடுத்து சுசித்ராவை அடுத்து மேலும் பலரும் அந்த வீடியோவை தங்களது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது