சிபிசிஐடி போலீசாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்ட சாத்தன்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவதாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மிதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே இரண்டு எஸ்.ஐக்கள் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே
தற்போது இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமைக்காவலர், ஒரு காவலர் என மொத்தம் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் கைது நடவடிக்கை நீளும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது