Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதும்மா லிஸ்ட் பெருசா போவுது!!! அம்பலமான நிர்மலாதேவி சீக்ரெட்டுகள், சிக்கிய வி.வி.ஐ.பி-க்கள்

Advertiesment
போதும்மா லிஸ்ட் பெருசா போவுது!!! அம்பலமான  நிர்மலாதேவி சீக்ரெட்டுகள், சிக்கிய வி.வி.ஐ.பி-க்கள்
, புதன், 31 அக்டோபர் 2018 (11:44 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற  பேராசிரியை நிர்மலா தேவி அளித்துள்ள வாக்குமூலத்தில் பல  உண்மைகள் வெளிந்துள்ளது.
 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை  நிர்மலா தேவி,  துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு  வருகின்றனர்.
 
சிபிசிஐடி போலீஸார் நிர்மலாதேவியிடம் நீண்ட நெடிய  வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். ஏப்ரல் மாதம் நிர்மலாதேவியிடம்  பெறப்பட்ட வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளனர். அதில் 
நிர்மலாதேவி தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். பின் அதிலிருந்து காப்பாற்றப்பட்டு  கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்  கல்லூரியில் கணித ஆசிரியையாக சேர்ந்திருக்கிறார். 
 
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியுடன் நெருக்கமாக  பழகி அவரிடம் அவ்வப்போது பணம் பறித்து வந்துள்ளார். அத்தோடு  நிறுத்தாமல் நகைக்கடை அதிபர், காண்டிராக்டர் என பல்வேறு  நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
 
மேலும் கல்லூரியில் முக்கிய பதவிகளை பெற முருகன், கருப்பசாமி  ஆகியோரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். கல்லூரி மாணவிகளை ரெடி  பண்ணி தர முருகன் தன்னிடம் கேட்டதாக நிர்மலா தேவி  கூறியிருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரிடமும் அவர் தொடர்பில்  இருந்திருக்கிறார். ஆளுநர் அலுவலகத்தில் உள்ளவர்களில் சிலரை  தனக்குத் தெரியும் என்று அவர் கூறியிருக்கிறார். 
 
நிர்மலாதேவி குறிப்பிட்டுள்ள விஐபிகளிடம் விசாரணை  நடத்தவிருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேல்முறையீடு இல்லை: தேர்தலுக்கு ரெடி; தினகரன் திடீர் பல்டி!!!