Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெகன் மோகன் ரெட்டியை ஏன் குத்தினேன்? - கேட்டால் அசந்து போவீர்கள்

Advertiesment
ஜெகன் மோகன் ரெட்டியை ஏன் குத்தினேன்? - கேட்டால் அசந்து போவீர்கள்
, வியாழன், 25 அக்டோபர் 2018 (16:52 IST)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டியை வாலிபர் ஒருவர் சிறிய கத்தியால் குத்தியதன் காரணம் போலீசாரை அதிர்சியடைய வைத்துள்ளது.

 
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற போது அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். அவர் அருகில் செல்பி எடுப்பது போல் வந்த ஒரு வாலிபர் அவரை குத்தியுள்ளார். மேலும், கோழி சண்டைக்கு பயன்படுத்தபடும் சிறு அளவிலான கத்தியை அவர் படுத்தியதும் தெரிய வந்தது. 
 
உடனடியாக அருகிலிருந்தவர்கள் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து அவனை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த மர்ம நபர் யார் என்றும் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சட்டப்பையில் ஒரு அட்டை இருந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர் கட்சியில் அவர் உறுப்பினராக இருப்பதன் அடையாள அட்டைதான் அது. இதைக்கண்ட போலீசார் அந்த நபரில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நான் அவரின் கட்சியை சார்ந்தவன்தான். ஜகன் மோகன் ரெட்டி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் முதல்வராக வேண்டும் என்பது என் ஆசை. எனவே, கத்தியால் குத்துபட்டால் அனுதாபத்தில் மக்கள் அவரை முதல்வராக்கி விடுவார்கள் என நினைத்தே அப்படி செய்தென் எனக்கூறினாராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியை விமர்சித்த பிரபல பெண் தலைவர்....