Publish Date: Wed, 10 Nov 2021 (16:52 IST)
Updated Date: Wed, 10 Nov 2021 (16:55 IST)
தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது இந்த வழக்கு தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.