Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டின் ஈசானிய மூலை எவ்வகையில் அமைந்திருக்கவேண்டும்...?

Advertiesment
வீட்டின் ஈசானிய மூலை எவ்வகையில் அமைந்திருக்கவேண்டும்...?
வாஸ்து சாஸ்திரத்தின்படி உள்ள எட்டு திசைகளில் ஒன்று வடகிழக்கு திசையாகும். அதாவது கிழக்கு மற்றும் வடக்கு திசைக்கு இடைப்பட்ட பகுதியை ஈசானிய மூலை அல்லது சனி மூலை என்று அழைக்கப்படுகிறது. 

ஈசானிய என்பது வீட்டின் தலை பகுதியாக அமைகிறது. வீட்டிற்க்கு ஈசானிய மூலை சரிவர பொருந்தி விட்டால் கெட்ட காலத்திலும் நன்மையே உண்டாகும். இது அவரவர் கர்ம வினை பொறுத்து அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
 
எட்டு திசைகளை ஒவ்வோர் தெய்வங்கள் ஆட்சி செய்கின்றன அதில் ஈசானிய மூலையை சிவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படுகிறது.
 
வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென் மேற்கே தோண்டி முடிக்கவேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்கவேண்டும்.
 
ஈசானிய மூலை இது எடை குறைவாக சுத்தமான பகுதியாக இருக்கவேண்டும் என்பது வாஸ்து சாஸ்திர விதியாகும். வடகிழக்கு மூலை (ஈசான்யம்) வெட்ட வெளியாக திறப்பாக இருப்பது, மனையின் அறைகளை விட தாழ்ந்து இருப்பது எல்லாவிதமான புகழ், செல்வாக்கு, செல்வம், அறிவு வருமானம் வரும் பகுதி மற்றும் நோய் நொடிகள் அணுகாது.
 
ஈசானிய மூலை வீட்டிற்க்கு நல்ல அதிர்வுகளை உண்டாகக் கூடிய இடம் ஆதலால் ஈசானிய மூலைக்கு உரிய விதி விளக்கின் படி அதிர்வலைகள் தடைகளால் பாதிப்பு அடையாமல் அமைக்க வேண்டும்.
 
மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...?