Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலர் சாகுபடிகள் அழுகும் அபாயம் – கரூர் அருகே விவசாயிகள் கவலை

மலர் சாகுபடிகள் அழுகும் அபாயம் – கரூர் அருகே விவசாயிகள் கவலை
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (18:48 IST)
கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றில் வெள்ள நீர் கடந்த சில வாரங்களாக தொடர்கதையாக அதிகரித்து வந்த நிலையில், ஆங்காங்கே அந்த நீர் அனைத்தும் கடலுக்கு தான் சென்றது என்ற கவலை அனைத்து விவசாயிகளிடம் இருந்தது.



இந்த நிலையில் கரூர் அருகே செவ்வந்திப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் ஒட்டிய பல பகுதிகளிலும், வாங்கல் தவிட்டுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மல்லிகை, முல்லைப்பூக்கள், விருட்சிப்பூக்கள், செண்டு மல்லி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெள்ள நீர் கரை உடைந்ததால், ஏற்கனவே பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமான நிலையில்

தற்போது, செண்டு மல்லி, விருட்சிப்பூக்கள், மல்லிகை பூக்கள், முல்லைப்பூக்கள் ஆகிய செடிகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளதோடு, ஆவணி மாதம் பிறந்த தற்போது தான் சுபமுகூர்த்தங்கள் நடைபெறும் வேலையில் பூக்கள் மிகுந்த தேவைப்படும் நிலையில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பூக்கள் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது.

மேலும், இந்த தண்ணீர் மூழ்கிய நிலையில், அதே பகுதியில் இருப்பதால் செடிகள் மற்றும் கொடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு இவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள முதலமைச்சருக்கு பாஜக கண்டனம்!