Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது மீண்டும் ஒரு வழக்கு

காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது மீண்டும் ஒரு வழக்கு
, செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (21:00 IST)
சிறையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது  மேலும் இரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் 2017ஆம் ஆண்டில் அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டியில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில்  இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்ற வழக்கு உட்பட சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு  முகிலன், கடந்த 338 நாட்களாக  சிறையில் உள்ளார். 

 
இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி மதியம் கரூர் நீதிமன்ற விசாரணைக்காக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -2யில் ஆஜர்படுத்தினார்கள் .  இதனிடையே  கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே பதியப்பட்டு இருந்த காவிரி ஆறு வாங்கல் பகுதியில்  மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு  தெரிவித்து தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 13 2016ல் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்கு இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

 
இதில் திமுகவின் விவசாய அணி மாநில செயலாளர்  முன்னாள் அமைச்சர் சின்னுசாமி உட்பட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார் . இதனை ஏற்று நீதிபதி வழக்கில் முகிலனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
மீண்டும்  கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர் . நீதிமன்றத்திற்கு வெளியே  போலீசார் அழைத்துவரப்பட்ட போது தமிழக அரசு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கோசம் எழுப்பிய முகிலன்   தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதோடு  மணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து நாம் போராட வேண்டும் 

 
தமிழகத்தில் காவிரியில் மணல் அள்ளியதால் சுமார் 50 டி எம் சி  தண்ணீர் சேமிக்க முடியாமல்  வீணாக கடலில் விடப்பட்டு உள்ளது என தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிபடி தனது எதிர்ப்பை வெளிப்படுத்த கோட்டு வாளகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம காமெடி பீஸ் நீங்க...எஸ்வி சேகரை கலாய்த்த தமிழ் நடிகர்