Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்கதையாக மாறி வரும் கரூர் டி.என்.பி.எல் ன் விபத்துகள் !

தொடர்கதையாக மாறி வரும் கரூர் டி.என்.பி.எல் ன் விபத்துகள் !
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (16:53 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித ஆலை மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து துவக்கப்பட்டு இயங்கி வருகின்றது இந்த நிறுவனத்தில் கடந்த 12 ம் தேதியன்று பைப் லைன் ரசாயன பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் கடந்த 21 வருடமாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளி கண்ணதாசன் படுகாயமடைந்து தீ விபத்துகளோடு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (19-08-18) மாலை உயிரழந்துள்ளார.



அவர் உயிரிழந்ததையடுத்து கரூர் டி.என்.பி.எல் (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்) மூடி மறைக்க முற்பட்டதாகவும், அடிக்கடி இந்த விபத்துகள் தொடர்கதையாக நடைபெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காமல், அப்படியே காலம் தாழ்த்தி வருவதாக கூறி கரூர் டி.என்.பி.எல் நிர்வாகத்தினை கண்டித்து பிரேதத்தினை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை, உரிய இழப்பீட்டு நிதி வழங்குவதோடு, இனியாவது இது போன்ற விபத்துகளை தவிர்க்க டி.என்.பி.எல் நிறுவனம் முற்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த திடீர் சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோவை காண


சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயரும் கடல்நீர் மட்டம்: உலகத்திற்கே சுனாமி ஆபத்து?