கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்வேந்தன் உள்பட சாட்சி அளித்த ஆறு பேர் பிறழ்சாட்சியாக மாறியதால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில் மாசுபிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதை அடுத்து அமைச்சர் மா சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் ஆஜராகிஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.