பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை அடுத்து, அவர் மீது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேசன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த புகாரில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீமான் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, சீமான் மீது வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.