பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களுக்கு 25 ஆண்டு தடை: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (22:45 IST)
தேர்தலின்போது பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஜெயகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது யாரால் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் தெரியும்,. இது திமுகவுக்கு ஒரு நல்ல பாடம்.
 
பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். 
 
திமுக, அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் 1000 கோடி, 2000 கோடி அடித்துள்ளனர். ஆனால் மக்களுக்கு கொடுப்பது 100 ரூபாய், 200 ரூபாய் மட்டுமே. மக்களை பண ஆசை காட்டி ஏமாற்றி வரும் இவர்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தேர்தல் ரத்து என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

சக பெண் ஊழியருடன் கள்ளக்காதல்.. மனைவி, 2 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொலை..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

ஜோதிமணி எம்பி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments