கரூர் சம்பவத்தை தொடர்ந்து அடுத்த இரு வாரங்களுக்கு விஜய்யின் பிரச்சார பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே விஜய் கட்சி நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பில் எதிர்காலத்தின் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பது குறித்தும், தற்போதைய இந்த சூழலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K