கரூர் கூட்டநெரிசல் பலி தொடர்பான வழக்கில் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர்த்து காவல்துறை சார்பில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Edit by Prasanth.K