Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: எந்த சேனலும் தெரியாதா?

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: எந்த சேனலும் தெரியாதா?
, புதன், 23 ஜனவரி 2019 (08:21 IST)
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் குறித்து சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக எச்சரித்துள்ளதால் நாளை எந்த சேனலும் தமிழகம் முழுவதும் தெரியாது என்று கூறப்படுகிறது.

கேபிள் டிவி கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி இனிமேல் ஜிஎஸ்டியுடன் ரூ.154 செலுத்தி 100 சேனல்களை இலவசமாக பார்க்கலாம்,  ஹெச்டி சேனல்கள் பார்க்க விரும்புபவரக்ள் அதற்கென கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்

மேலும் எந்த ஒரு சேனலும் ரூ.19க்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி, விரும்பாத சேனல்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையும் அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

webdunia
ஆனால் இந்த புதிய அறிவிப்புக்கு தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் நாளை ஒருநாள் தொலைக்காட்சியில் எந்த டிவியும் ஒளிபரப்பும் தெரியாது என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்: டுவீட்டை டெலிட் செய்த பிரபல ஊடகம்