Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 சேனல்கள் இலவசம்: கேபிள் டிவி, டிடிஹெச் கட்டணங்களில் மாற்றம்

Advertiesment
100 சேனல்கள் இலவசம்: கேபிள் டிவி, டிடிஹெச் கட்டணங்களில் மாற்றம்
, திங்கள், 24 டிசம்பர் 2018 (14:37 IST)
டிராய் பிறப்பித்துள்ள புது ஆணையால் வரும் 29 ஆம் தேதி முதல் கேபிள் டிவி, டிடிஹெச் ஆகியவற்றில் கட்டண மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு,
 
ரூ.130 டெபாசிட் கட்டணமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அடிப்படையாக 100 சேனல்கள் இலவசமாக வழங்கப்படும். 
 
மேலும், கட்டண்மில்லாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு 25 சேனல்களுக்கு ரூ.20 மற்றும் 18.3% ஜிஎஸ்டி சேர்த்து ரூ.23.60 கட்டணமாக செலுத்த வேண்டும். 
 
கேபிள், டிடிஹெச், ஐபிடிவி உள்ளிட்ட எந்த இயங்குதளமாக இருந்தாலும், மாற்றங்களின்றி ஒரே மாதிரியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேனல்களை மாதந்தோறும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இதில் இருப்பது தனிச்சிறப்பம்சமாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுரோட்டில் ஜோசியரை வெறித்தனமாக வெட்டிய மர்ம நபர்: திருப்பூரில் பயங்கரம்