மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக பேருந்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீர் என தொழில் நுட்ப கோளாறு காரணமாக தானாக ஓடியது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இந்த பேருந்து நகர்ந்து சென்றதாகவும் அதன் பின்னர் எதிரே இருந்த சுவரின் மீது மோதி நின்றதாகவும் கூறப்படுகிறது.
நல்ல வேலையாக பேருந்துக்குள் பயணிகள் யாரும் இல்லை என்றும் அதேபோல் பேருந்திம்ன் குறுக்கே யாரும் வராததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
பேருந்தை நியூட்ரலில் வைத்துவிட்டு ஓட்டுனர் கீழே இறங்கி உள்ளதாகவும் ஓட்டுனர் இல்லாமல் பேருந்து நகர்ந்ததை பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.